பக்கம்:அவள்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோடு 蘆證烈 "வழிப்போக்கன் என்றால் என்ன அர்த்தத்தில் சொல் கிறீர்கள்? சன்னியாசியா?” 'நான் சன்னியாசி இல்லை. வழிப்போக்கன் என்றால் வழிப்போக்கின் கால்டோன வழி, போய்க்கொண்டிருப் பவன். கால்நடையாக நம்நாடு பார்க்க ஆயுசு போதாது.” தேசாந்தரியா?" 'அப்படியும் கொள்ளலாம்... அடேடே' " என்ன?" 'குழந்தை, மடியை நனைத்துவிட்டாள்.' அவர் சொன்னது உறைக்க அரைக்கணம் சென்றது. உறைத்ததும் அவனுக்குச் சீற்றம் பொங்கிற்று. அடிக்கக் கை ஓங்கிவிட்டான். - 'அவனைத் தொடவேண்டாம்'-குரல் என்னவோ மெத்துத்தான். ஆனால், அதில் ஒரு எஃகை அவன் இப்போது உணர்ந்தான். அவன், அவளைத் தொட மாட்டான். அதையும் உணர்ந்தான். "அவள் இதுபோல் இருந்ததில்லை.'; "அப்போ இது அவள் விளையாட்டு." 'ஏதுள் ’’ ჯ· 'எனக்கு ஒரு அவள்தான் உண்டு. அவனேதான் எல்லாம். நம் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறாள்.' என்ன அவலம்?" - 'குழந்தையின் ஸர்வ சகஜமான செயலில், சொந்தத் தில் ஏதோ அவமானம் நேர்ந்துவிட்டதாகப் படித்தா கிறது அல்லவா? தன்மடியில் ஸ்கஜம், அதுவே பிறர் மடி யில் அவமானம். அதுதானே?!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/153&oldid=741495" இருந்து மீள்விக்கப்பட்டது