பக்கம்:அவள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோடு 1 3 கழித்தும் என்னை அறியாமல் என்னை ஏதோ உளறப் பண்ணிவிட்டது. நான் என்ன அர்த்தத்தில் சொல்லி யிருந்தாலும் தப்பு தப்புத்தான்! தாயே என்னைப் பொறுத்துக்கோ.” அவருடைய வேதனையைக் கண்டு, அவன் மிரண்டு போனான். நீங்கள் இந்த அளவுக்குப் பாராட்டும்படி ஒண்ணும் சொல்லிவிடவில்லை.” 'இல்லை, அது அப்படியில்லை. இந்த வயசிலும் வாயை அலம்பற நிலையிலிருந்தால் இந்த வயசு இருந்த தற்கு என்ன அர்த்தம்? உசிரோடு எல்லாரும்தான் இருக் கோம். உசிர் சோறுவரைக்கும். வாழ்வு என்பது தனி. அதில் வாக்கு லேசுப்பட்டதல்ல. நாக்கு, அம்பாளின் பீடம். நாக்கு துனியில் அவள் க்ஞாசக்கரத்தில் தி கிகு து ستتم مصمم புவனமே சுத்தறது ” ‘பூம் கோயிலில் நகார் முழங்கிற்று. அவனுக்கு உடல் ஜிவ் விட்டது. நேரங்கள், அவருடைய சொல் பட்டு வேளைகளாக மாறிக்கொண்டிருந்தன. இதுவே அவனுக்குப் புது அனுபவம். எதிர் மேடையில் உட்கார்ந்துகொண்டான். 'நீங்கள் ஒன்றும் தவறு சொல்லவில்லை. எனக்கு அப்பா இல்லை’ என்றான். அவருக்குக் கேட்டதோ இல்லையோ? சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். 'எனக்கு அப்பா இருக்காரோ இல்லையோ? எனக்குப் பத்து வயசிருக்கும், ஊமைக் கணவாயிருக்கு. அப்பாஅம்மா சண்டை. வீட்டை விட்டுப் போய்விட்டார்.” கிழவர், இலையடித்து மாதிரியிருந்தார். ஏதேனும் ஜபத்தில் ஆழ்ந்துவிட்டாரோ? அவர் கண்கள் மூடி யிருந்தன. , அ.-ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/157&oldid=741499" இருந்து மீள்விக்கப்பட்டது