பக்கம்:அவள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு 117


அவன் குரலில் தவிப்பு தெரிந்தது. லேசாக ஒரு தேம்பல்கூட வெளிப்பட்டதோ?

"சொல்வதற்கு நாம் யார்? நமக்கென்ன தெரியும்? அவள் விளிக்கும் விதம், சமயம், வழி எல்லாமே அவளுடையது. எதுவுமே நம்முடையதல்ல. நாமே நமக்கல்ல என்பதை உணர்வதுகூட அவள் கருணையால்தான் முடியும். அதுகூட நம்மில் இல்லை.”

அபிதா, துாக்கக் கலக்கமாக வெளியே வந்து பெரியவர் மேல் சாய்ந்தாள்.

"சேப்புத் தாத்தா!"-குழந்தையின் அதரங்கள் அவர் மார்க்குலையில் முத்தத்தில் ஒற்றின. - கிழவருக்கு உடல் பூரா அதிர்ந்தது. அப்படியே சொகுஸாகச் சரிந்து, அவர் மடியில் படுத்துக் காலை நீட்டி, கூணத்தில் உறங்கியும் போய்விட்டாள்.

நேர்ந்த நேரம், அதைச் சொல்லும் நேரம் இல்லை.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு மேலும் புழுங்கிற்று.

"எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. இத்தனை உரிமையா, என்னவோ பிறந்ததிலிருந்து உங்கள் மடியில் தவழ்ந்து விளையாடின மாதிரி- இது அபிதா தானா? எனக்கு அதிசயமாயிருக்கு. விட்டுச் சொல்றேனே, உங்களைப் பார்த்தால் இப்போ பொறாமையாயிருக்கு."

‘பூம் ரொய்ஞ்ஞ்....

மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பினதோ அல்லது நோக்கி வருகிறதோ-ஆகாய விமான ரீங்காரம் இடத்தை நிறைத்தது. அதன் முன்னணியிலிருந்து குரல் அவனை எட்டிற்று. தணலில் வைத்த கனகன -

"அவள் தம்மை வாத்யமாக வாசிக்கிறாள். அவள் ஸங்கீதேசுவரி-நம் உடம்பின் கணக்கற்ற நரம்புகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/161&oldid=1497057" இலிருந்து மீள்விக்கப்பட்டது