பக்கம்:அவள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 லா. ச. ராமாமிருதம் தந்திகள்-நமக்குத்தான் கணக்கற்றவை, ஒவ்வொன்றின் வேர்ச் சுழிகூட-அவள் அறியாவிட்டால், அது அங்கு இல்லை- அவைகளின் ஸ்வரனுஸ்வரஸ் தானங்கள் அவளு டைய மீட்டலில் அதனதன் ஸ்ாயுஜ்யத்துக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனதன் தனித்தனித் தாள ப்ரமா னங்கள் . லயப்ரமா னங்கள் அவளுக்குத்தான் தெரியும். அதனதன் பரமாணிக்கங்களும் அவளுக்குத்தான் சொந்தம். அவள் பண்ணிக்காட்டும் ஸ்ருதிபேதங்கள் நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அவள் ஸ்ருதிஸ்-த்த மானவள். பிந்து மாவினி. ஸ்வநாத விநோதினி. அமிர்த வர் ஷணி. லீலா கான லோலி, நாமங்கள் கம்பீர சாட்டை. அவனுக்குத் தொண்டை வெளியே குதித்துவிடத் தவித்தது. நாமங்கள், தாம் இறங்க இடம் தெரிந்து தைக்கும் ஏவு கணைகள். - . தகதிமி திமிதக-நெஞ்சை ஏதோ நடனம் மண்ணாய் மிதித்தது. ஸ்மகளஸ்மகரி நிமகளில அந்தரத் தந்தியில் மந்திரத் தும்புரு. தந்திர ப்ருகடை தந்தினத்தன தான. ஏபேமோ பழக்கமிலா வார்த்தைகள், ஓசைகள். காலம் கடந்த நித்திரை கலந்து அவன் நரம்புகளில் விழித்தெழுந்த மாதிரியிருந்தது. இவர் என்னை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? இந்க இன்ப பயங்கரம், இந்த நிலை இன்னும் சற்று நீடித் தால் நானே எனக்கில்லாமல் போய்விடுவேனோ? எனக்கு நான் வேணுமே! என் வீடு, என் கிரிஜா, என் அபிதா, என் அம்மா, இந்த மொஸாய்க் தரை, கொல்லைப்புறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/162&oldid=741505" இருந்து மீள்விக்கப்பட்டது