பக்கம்:அவள்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோடு Í Í # தில் துளசிமாடம், வாழைக்கன்று, தென்னங்கன்று செம்பருத்தி, மல்லி, வேலிதாண்டி அதை மேயும் ஆடு எல்லாமுந்தான்- நான் சர்வ சாதாரணமானவன், பாமரங்கள்தான் என் படுகை. துறவு எனக்கு வேண்டாம் வேனவே வேண்டாம் தன்னைக் கவியும் அழுத்தத்தை, அசுரப்ரயத்னம் தந்த அரக்கபலத்தில் குஹை வாயை மூடிய பாறாங் கல்லைத் தள்ளுவதுபோல் உதறினான். தன்னை அடித்துச் செல்லும் வெள்ளத்தில் கைநழுவும், பாமரங்களின் நினைவுக் கிளையை, கரைப்புல்லை, உயிர்ப்பிடியை மீண்டும் பற்றும் முயற்சியில், பேச்சை விட்ட இடத்தி லிருந்து தொடர்ந்தான். 'ஆச்சு, நாங்களும் வயதுக்கு வந்து அவா அவா அச்சில் விழுந்தாச்சு. தம்பி, பிலாயில் இருக்கிறான். தங் ைக ைய க் கோயமுத்துரரில் கொடுத்திருக்கிறது. அவளுக்கு பிரசவம் பண்ண அம்மா போயிருக்கா. சீடை முறுக்கு, பருப்புப் பொடி, திரட்டுப்பால்...இல்லையா, இதயாதிகளுடன். அம்மா ஒரு கவலையில்லா மனுவி! அப்பாவைப்பற்றி அவள் கிணுங்கவேயில்லையே! 'செத்தவா பின்னாலேயே நாமும் போயிடறோமா? உடன் கட்டையேர் ற காலத்திலிருக்கறதா உங்கப்பா நினைச்சுண்டிருக்கா. ஏதோ திமிர் பிடிச்சுத் தன் பொறுப் பெல்லாம் விட்டுட்டு ஓடிப்போனால் அதுக்கு நான் ஆளா? திரும்பி வராத வரை, அப்பிடி இப்படி ஒண்னும் தெரியாதவரை என் மஞ்சளுக்கும் பூவுக்கும் பங்கமில் லாமல் போயிடறேன்- - ஸ்ர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/163&oldid=741506" இருந்து மீள்விக்கப்பட்டது