பக்கம்:அவள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 லா. அ. ராமாமிருதம் அவளுக்குத் தெரிந்த தோத்திரம் அது ஒண்ணுதான். ஒருநாள் தவறாமல் சொல்லிக்கொண்டு குத்துவிளக்கை நமள் இரிப்பாள். இப்படியும் ஒரு பிறவி உண்டா? என்று அதிக இப்பேன். ஆனால், அவளை என்ன செய்யமுடியும்? 'அவளுடைய நாமங்கள், அஸ்திரங்கள் நட்ட வேலி. அதன் பாதுகாப்பை அவளால்கூடத் தாண்டமுடியாது." பெருமூச்செறிந்தான். 'எங்களைத்தான் பார்க்கிறீர்கள். நான், இவள், அபிதா, எங்களுக்கு லேட் மாரியேஜ் காரணம்? ஜாதகத் தில் கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை. தோஷத்துக் குத் தோஷப் பொருத்தம் ஒருவரையொருவர் அடைய அப்படித் தேடி அலைஞ்சிருக்கோம். அ-ஹ்-ஹா - வாய்விட்டுச் சிரித்தான். நாளாகித்தான் அபிதாவும் பிறத்தாள். அதற்கே எத்தனை தவம், அரசமரம், ராமேசரம். பிள்ளை எதிர்பார்த்தாள்; கிடைத்தது. அபிதா. அதுவும் ஏதோ இனங்காத கருவிலிருந்து பிடுங்கியெடுத்த மாதிரி, சிரம ப்ரசவம். அதனால்தான் எனக்கு 48, அபிதா 3, அவளுக்கு முப்பத்தி அஞ்சுஅஹம்-ஆறு-' - "கணக்கெல்லாம் ஒப்பிச்சாச்சா? இனி சாப்பிட இரலாமா?” ஒஹோ, ஒட்டுக் கேக்கறையா? உன்னை மறந்தே போச்சு, நல்லவேளை, ஞாபகப்படுத்தினே. வயிற்றில் குழி விழுந்தமாதிரி ஒரே பசி. ஸார் எழுந்திருக்கிறேளா?” ராச்சாப்பாடு எனக்குக் கிடையாது." 'என்ன ஸார், என் வீட்டில் கை நனைக்கக்கூடா துன்னு கங்கனமா?” அவளுக்குக்கூட என்னவோ மாதிரியிருந்தது. புதுசா கத்திரிக்காய்ப் பொரிச்ச குழம்பு பண்ணியிருக்கேன். எழுந் திருங்கோ-இல்லை, ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/164&oldid=741507" இருந்து மீள்விக்கப்பட்டது