ஜனனி
அணுவுக்கு அணுவாம் பரமானுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்ம்மெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது வேளை நள்ளிரவு. நாளும் அமாவாசை. ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக்கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில் எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள் வதற்காகத் தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில் ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கை விரல் நகங்களை யும் கடித்துக்கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஒர் இளம் பெண் மரத்தடியில் பல்லாந்து படுத்த வண்ணம், இடுபைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.
ஜன்மம் எடுக்கவேண்டுமெனவே பரமாணுவாய் வந் திருக்கும் தேவியானவாள், உடனே அவ்விளந்தாயின் உள் மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில்
பக்கம்:அவள்.pdf/166
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
