பக்கம்:அவள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனனி 131

'இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூனுபேரை ஏற்கனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங்கண்டிருக்கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேன்; மூணும் பெத்தேள்; தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு இன்னமும் பாவமூட்டையைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.'

ஐயர் புழுவாய்த் துடித்தார். 'என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்-’

அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. 'உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங்கள் குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தரம் பண்ணிக்கணும்னு தோனித்தே, அதுதான் உங்கள் எண்ணம் ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே

'இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை...'

அம்மாள் 'கடகட'வெனச் சிரித்தாள். குழந்தையைக் கண்டுட்டேளா? கனாவிலேயும், குளத்தங்கரையிலும் தவிர!”

பதிலையும் தனக்குள்ளே அடக்கிய அக்கேள்வி, பழுக்க நெருப்பில் காய்ச்சியபிறகு, அடிவயிற்றுச் சதை யல் மாட்டிக் குடலைக் கிழிக்கும் கொக்கி மாதிரி இருந்தது. நிறைந்த ஆச்சரியத்தில் கத்தி அழக்கூட மறந்துவிட்டாள் குழந்தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/175&oldid=1497016" இலிருந்து மீள்விக்கப்பட்டது