பக்கம்:அவள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனனி #33 நிர்க்குண நிராமயத் தன்மையை வெளியிட்டது. வந்த குழந்தையை அங்கீகரிப்பதைத் தவிர அதன் ஆதியைச் சோதிக்க முயல்வதில் என்ன பலன்? "சரி, இவளுக்கு என்ன பேரை வைப்போம்?" அம்மாள் கொஞ்சலாய், பிடாரி மாதிரி கத்தறது, *பிடாரி"ன்னு வையுங்களேன். நான் ஊர்ப் பிடாரி, இவள் ஒண்ட வந்த பிடாரி' ஐயர், பிள்ளையார் சுழியிட்டு "ஜனனி ஜன்ம செளக்கி யானாம் என ஆரம்பித்துவிட்டிருந்த கைக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் முகம் சட்டேன மலர்ந்தது. - குழந்தையைப் பார்த்து மெதுவாய்க் கூப்பிட்டார்: "ஜனனி, ஜனனி..." 家 忠 冰

  • பிருேங்கோ-பாருங்கோன்னா! கொழந்தை விளக் கைப் பாக்கறா!'

பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்போதுதான். ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்து விட்டு, இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப் பொறியாய் அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக் கிறது. ஆனால் அவள் இப்பொழுது பொறியாயினும், அவன் துணாய்த்தான் விளக்குச் சுடரில் நிற்கிறான். "ஜனனி!' "இதைப் பாக்கமாட்டேங்கறேளே! குழந்தை சிரிக்கிறா!' அம்மாள் தன் ஆனந்தத்தில் குழந்தை மாதிரி கை கொட்டிச் சிரிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/177&oldid=741521" இருந்து மீள்விக்கப்பட்டது