பக்கம்:அவள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜனனி :33 அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா? அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள். 'ஒ'-ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர்மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார். "ஈசுவரி: எல்லாம் உன் கிருபா கடாகrம்:” விளக்கில் சுடர் மறுபடி பொறி விட்டது. 'சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறா யாக்கும்! செய், செய்......' சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால் களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். 露 激 ※ யேர் வீடு ரமித்தது, அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன்? திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருக்கிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்ட மென்று கண்டு தம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின. 'இந்தப் பொண்ணு எந்தப் பொண்ணோ! ஆனால் நல்ல ராசி இருக்குடி அது இருக்கிற இடத்தில் பட்ட மரங் கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறது.உ!’ 宰 宗 岑

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/179&oldid=741523" இருந்து மீள்விக்கப்பட்டது