பக்கம்:அவள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xviii உறவின் விளைவாய் புவனத்தை ஈன்று இயக்கும் ஆதி சக்தி. தாயில் துவங்கி, பெண்மையின் அத்தனை உறவு களின் விஹாலம் அவள். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறும் சத்ய மாயை என் னென்று சற்றே புரிகிறது. சத்யம் எவற்றிலும் ஊடேயிருந்து கொண்டு அவ்வப் போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மைகளும் பேதங்களும், உருவங்களும், நாமங்களும், கேள்விகளும் ஸ்த்ய மாயை. அவள் சத்தியம் (நீ அவனாய்ப் பார்த் தாலும் சரி, அவளாய்ப் பார்த்தாலும் சரியே! அவனும் அவளே.) ஸ்த்ய மாயா லீவா விநோதினியும் அவளே. ('செல்லக்குட்டித் தாத்தாவிடம் ஏமாப் பாட்டியைப் பாக்குவேன்!') - -- அவளை உள்நோக்கில் தேட, வியக்க, வியப்பை வளர்க்க, என்றும் அவள் அருகாமையில் நித்யத்வத்தை உணர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் தேவை. எங்களுக்குப் பெருந்திரு, ப்ரவர்த்த துரீமதி, லால்குடி அம்ப ஸ். விக்ரஹத்தைக் காட்டிலும் என்றுமே ஆவாஹனம் மிகப் பெரிது. அதுதான் அவள். சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். பிறந்த மேனியில், பின்னால் கை கோர்த்துக் கொண்டு, ப்ர சமாய் பாடிக்கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். "சோனாப் பாப்பா நானே! தங்கப் பாப்பா நானே! குட்டிப் பாப்பா நானே! ஜனனிப் பாப்பா நானே!" மனம் எனக்கு உச்சரிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/18&oldid=741524" இருந்து மீள்விக்கப்பட்டது