பக்கம்:அவள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜனனி 141 இந்தக் குழந்தையை யார் பெற்றதென்று நினைக் கிறாய்? நீ பெற்ற குழந்தைதான். நீயே விழுங்கப் பார்த்தால் அது உள்ளும் போகாமல் வெளியும் வராமல் தொண்டையில் மாட்டிக் கொண்டதும் எடுத்துவிட என்னைக் கூப்பிடுகிறாயா?"

    • ஆம்மா!' விளக்கு சிரித்தது.

w. "ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடு இறாய்?" ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளிவீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்: 'தாயி மகமாயி தாயி மகமாயி நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக் நேரு மகமாயி நேரு மகமாயி 'கம்மா தேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடை தனில் இறக் தாயி மகமாயி தாயி மகமாயி fகம்மா தாடை தனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக் காளி மகமாயி காளி மகமாயி 'கம்மா கழுத்துதனில் உள்ன முத்தை மார் புதனில் இறக்கம்மா மாரி மகமாயி மாரி மகமாயி மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா வாரி மகமாயி வாரி மகமாயி வயிறு தனில் உள்ள முத்தை தொடைதனிலே இறக் தாயி மகமாயி தாயி மகமாயி - 'கம்மா தொடை தனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக் மூது மகமாயி மூது மகமாயி 'கம்மா முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/185&oldid=741530" இருந்து மீள்விக்கப்பட்டது