பக்கம்:அவள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 லா. ச. ராமாமிருதம்



சாவு இல்லாததனால், நீ என்மேல் மண்ணைப்போட்டு மூடினாலும், நான் மூச்சுக்குத் தவித்துக்கொண்டாவது இருந்துகொண்டுதானிருக்கிறேன். என்னைப் புதைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டால் நான் வர முடியுமா? ஆனால் இப்பொழுது நீயே உன்னுள் புரண்டதால், நான் வெளிவந்தேன். என் கைகள் ஒடிந்திருக்கின்றன. இருந்தும் உன்னை அணைக்கத்தான் நீட்டுகிறேன். நீ நானாக இருப்பினும், நான் நானாய்த்தான் இருக்க முடியும். நான் நான்தான். நான் நீயாக முடியாது, நீதான் நானாக முடியும். எனக்கு நா'னிலிருந்து மாறும் இயல்பு இல்லை.

"ஜனனீ, நீ இதை அறி. இப்பொழுது நீ-என்னிலிருந்து பிரிந்த நீ-மறுபடியும் 'நா'னாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று உருவற்றது, உருவற்ற நிலையிலிருந்தே, உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள் தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால், ஜனனீ, ஜனனம் எவ்வளவு பின்னம் ஆயினும் துண்டங்கள் இன்னமும துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனீ, நீ என்னில் மூழ்கினால், நீயே நானாய்விடுவாய். இதுதான் 'உன்'னின் மீட்சி. இதுதான் 'உன்'னின் மீட்சி...மீட்சி அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது. குழலின் நாதம்போல்.

ஜனனி பதினைந்து வருஷங்கள் சிட்சை விதிக்கப்டட்டாள். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவளா, சிட்சைக்கு அனுப்பப்பட வேண்டியவளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/202&oldid=1496397" இலிருந்து மீள்விக்கப்பட்டது