பக்கம்:அவள்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாகrாய மூங்கில் பாலன் தின்மேல் மூவரின் கனம் அழுத்தியதும் பாலம் க்ரீச் க்ரீச்சென்று தொட்டிலாடிற்று. பாலம் ஆடவும் பையனுக்கு ஒரே குவி. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொப்புத் தொப்பெனக் குதித்தான். பாலம் ஐயோ ஐயோவெனச் செல்லமாய் ஒலமிட்டது. 'வா, வா போகலாம்.' 'இரு அம்மா செத்தே' என்று வர மறுத்துத் தும்பை இரு அம் తొత్తో బ్రీ శFథ இந்தி துதி இ இழுக்கும் கன்துக்குட்டி போல் அவள் கையைப் பிடித்து இழுத்தான். நேரமாயிடுத்தே; அப்பா முன்னாலே போறாரே 'அதெல்லாம் முடியாது, வரமுடியாது, போ” என்று பையன் தலையை ஆட்டி முரண்டி இன்னொரு முறை குதித்தான். அவனுக்கு ஏமாற்றம் நேராதபடி பாலமும் கத்திற்று. "இதோ பாருங்களேன், உங்கள் பிள்ளை படுத்தற பாட்டை!’ நாலடி முன்னால் போய்க்கொண்டிருந்த அவள் கணவன் நின்று திரும்பி நோக்கினான். மாலையின் மஞ்சள் வெய்யிலில் பையன் பாலசூரியனாய்த் தகதகத் அ.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/205&oldid=741552" இருந்து மீள்விக்கப்பட்டது