பக்கம்:அவள்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16. லா. ச. ராமாமிருதம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகம் சுண்டிப் போயிருந்தது. இருவரும் வெகுநேரம் வாளா யிருந்தனர். "தாrாயணி!' அவன் மெதுவாகக் கூப்பிட்டது அவளுக்குக் காது கேட்கவில்லை. கிட்ட நெருங்கி முகத்தெதிரில் விரலைச் சுண்டினான். '-ம்ம்ம்?' திடுக்கென விழித்துக்கொண்டாள். "சான்ன தபஸில் இறங்கிவிட்டாய்?" "நான் தாrாயணி அல்லவா? நீங்கள் பசுபதி.' அவள் அப்படிச் சொன்னதுமே அவன் முகத்தில் குடிக்கெனக் குங்குமம் குழம்பிற்று. உடல் கிடுகிடென ஆடிற்று. கீழே விழாதபடி அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவள் அ வ ைன அப்படியே அணைத்துக்கொண்டாள். அந்த வேகத்தில் பாலம் ஊஞ்சலாடிற்று. அவளுள் கிளர்ந்த தாய்மை தாங்க முடியாமல் வாய் குழறிற்று. புடவைத் தலைப்பால் நெற்றியை ஒற்றினாள். அப்பா! எவ்வளவு பலவீனமாய்ப் போய்விட்டார்: ஒன்றுமே தாங்க முடிவதில்லை. அவள் விழிகள் நிறைந்த கன்னத்தில் கண்ணிர் வழிந்தது. "ஏன் அழுகிறாய்?" அவனைக் கட்டிக்கொண்டு தேம்பினாள். 'தாrாயணி, ஏன் அழுகிறாய்?’ 'ஒருநாள் இது மாதிரி சமயத்தில் உங்களை நான் இழந்து விடுவேனோ?” - 'நம் பையன் இருக்கிறான்-’’ 'இருந்தால் என்ன? உங்களுக்குப் பின்தான் அவன், எல்லாமுமே! நமக்குப் பின்தான் அவன் வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/210&oldid=741558" இருந்து மீள்விக்கப்பட்டது