பக்கம்:அவள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 லா. ச. ராமாமிருதம் "என் கையில் செக்கைத் திணித்தார். நீங்கள் என் பெண்ணுக்கு இழைத்திருக்கும் தீங்கிற்கு உம்மைச் சும்மாவே விடுகிறேன் என்று வைத்துக்கொள்ளும்.' கொஞ்சம் மூச்சு விடுங்கள். உங்கள் பெண்ணிற்கு நான் என்ன தீங்கு இழைத்துவிட்டேன்? "இன்னும் என்ன வேண்டும்? ஜவ்வாதுப் பொட்டும் கஸ்தூரி வாசனையும் இட்டுக்கொண்டு அவள் மனத்தை மயக்கியிருக்கிறீர்.” - செக்கை நாலு சுக்ககல்களாய்க் கிழித்து அவர் ஜேபி யில் செருகினேன். தயவு செய்து போகிறீர்களா ?” "மிஸ்டர் பசுபதி!' "உடனே போய்விடுங்கள். தயவு செய்து உடனே!" அவர் போன பிறகு வெகுநேரம் நான் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையவில்லை. உன்னைப்பற்றி நான் அதுவரை நினைத்ததில்லை. நான் ஒரு நாளும் அதுவரை வாசனைகள் உபயோகித்ததும் இல்லை. எங்கோ கடியாரத்தில் மணி ஒன்பது அடித்தது. கஸ்தூரி, ஜவ்வாது, கஸ்தூரி ஜவ்வாது என்று இரண்டு வார்த்தை கள், தொண்டையில் நார் சுற்றிக்கொண்டிருந்தன. இரண்டு கட்டடம் தாண்டினால் சந்தனக் கடை. சரக்கென்று எழுந்து சென்றேன். ஜவ்வாதும் கஸ்தூரி யும் வாங்கிக்கொண்டு வந்தேன். கண்ணாடி பார்த்துச் செவ்வையாக இட்டுக்கொண்டேன். தம்பூரை மீட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தேன். “நானே என் வசத்தில் இல்லை. அந்த சமயம் எனக்கு உடல்கூட இல்லை. குரலாய் மாறிப் போயிருந்தேன். எத்தனை நேரம் பாடினேனோ? "மாடிப்படியில் திடுதிடுவென யாரோ ஏறி வரும் சத்தம். கதவு படீரெனத் திறந்தது. வாசற்படியில் ஒரு கணம் நீ நின்றாய். நீ அலங்கோலமாக இருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/226&oldid=741575" இருந்து மீள்விக்கப்பட்டது