பக்கம்:அவள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 லா. ச. ராமாமிருதம்



'உங்கள் சமையல் சுலபம்னா ஆயிடுத்தா? அவல் இடிச்சுத் தர ஆண்டாளு வரேன்னு இருக்கா. இன்னிக்கு விட்டால் அகப்படமாட்டாள். மாட்டுக்குப் புண்ணாக்கு ஊற வைக்கனும். பருத்திக் கொட்டை அரைக்கனும். வரதன் பால் கறக்க வர நேரமாச்சு. நேற்று சாயந்திரம் சுருக்கக் கறந்தாச்சு. கொட்டாய்ப்பக்கம் எட்டிப் பார்க்கல்லே. மடிகனம் தாங்காமல் மாடு தவிக்கிறதோ, இல்லே, கன்னுக்குட்டி தும்பையறுத்துண்டு துள்ளி விளையாடறதோ? முத்தத்தில் தேய்க்கற பத்து அம்பாரமாக் கிடக்கு."

சொல்லிக்கொண்டே கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.

'உன் தலையெழுத்து. எக்கேடு கெட்டுப் போ!'

'தள்ளாடித் தள்ளாடி நடந்து பின்கட்டுக்குச் சென்றாள்.

கிழவரின் கோபத்தில் ஊஞ்சல் வேகம் கண்டது.

கலியாணம் பண்ணினான்களாம், -கலியாணம்; சேஷோமம் பண்ணின வீடாம்! என்னைக் கேட்டால் முணு நாளாய் வீட்டில் சர்க்கஸ்னா நடந்தது! ஹோமம் எங்கே நடந்தது? புது வேட்டியும் புதுப்புடவையும் சாத்தி நாற்காலியில் உட்காத்தி வெச்சுக் கலர் ஃபோட்டோ எடுத்துட்டா ஆயிடுத்தா? சடங்கிலெல்லாம் நம்பிக்கை இல்லையாம்! என்னெதிரேயே இப்படிப் பேச என்ன துணிச்சல்!

இப்பவே தாஸ் புரசல் விட்டாச்சு. நீங்கள் ரெண்டு பேரும் இனிமேலும் இங்கேயிருந்துண்டு என்ன பண்ணனும்? பட்டணம் வந்துடுங்கோ. இவன் எண்ணம் எனக்குத் தெரியாதா? கார்க்கோடகன். நிலத்தை வித்துப் பணமாக்கிப் பங்காக்கனும். ஆமாம், எங்கே பணம் அதிகமாயிருக்கோ அங்கேதான் தேவையும் அதிகமாயிருக்கு, விபரீதம் 'அமலி அமலி! என்ன பண்றே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/234&oldid=1496456" இலிருந்து மீள்விக்கப்பட்டது