பக்கம்:அவள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமலி 195

குமாரன் மாதிரி. உடம்பில் ஜலம் முத்துத் துளிச்சுண்டு; ஏற்கெனவே நல்ல சிவப்பா, அப்படியே தகதகத்துண்டு--அப்பா, உடம்பு சிலுக்கறது. கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அங்கிருந்து இந்த மஹா புருஷனை அடைவேனா'ன்னு நெனச்சுண்டேன்."

'நான் மஹாபுருஷன் இல்லை.” என்று அவர் முணுமுணுத்தாலும் உள்ளுர சந்தோஷமாயிருந்தது.

"அதுக்காக விரதம் எடுத்தேன். அப்படிப் பட்டினி கிடந்தேன், இப்படி மெலிஞ்சேன்னு சொல்லல்லே. பெருமாளுக்கு அங்கப்ரதக்ஷணம் பண்ண யாரோ சொன்னாள். மறுத்துட்டேன். பிராகாரத்தில் நான் உருண்டு நாலுபேர் கண் எச்சில் என்மேல் பட நான் விரும்பவில்லை."

அடுப்பை ஊதினாள். ஜ்வாலை குபீரிட்டது.

'உங்களைப் பார்த்த ஆறா மாசமே நான் உங்களிடம் வந்து சேர்ந்துட்டேன், வெச்சுக்கோங்கோ, தவம் என்கிறது கண்ணை மூடிண்டு மாலையை உருட்றது இல்லே. தவங்கிறது ஒரு நினைப்பின் ஒரே நினைப்புன்னு தோனறது. வங்கியோடுதான் வந்தேன். மூணரைப் பவுன்.'

'ஆகாதா? நீ போனப்போ பதினஞ்சு வயது; வந்தப்போ பதினெட்டு. இல்லையா?”

"ஓஹோ, கேலி பண்ணறேளா? நானே சத்தே வாளியபுத்தான். என்னவோ துர்க் கனா. ஆனால் மறக்காத கனா. சரி, வென்னீர் சுட்டுப்போச்சு. குளிக்க வாங்கோ

***

வர் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டுப் பூஜை அறையுள் நுழைந்தபோது அவள் சுவாமி அலமாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/239&oldid=1496470" இலிருந்து மீள்விக்கப்பட்டது