பக்கம்:அவள்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமலி 夏憩9 அவருக்கு நெஞ்சை என்னவோ பண்ணிற்று. 'அமலி, வரவர எனக்கு உன்னைப் புரியல்லே! நீ அசடா, புத்திசாலியா, விவேகியா? எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்கே, எல்லாத்துக்கும் சமனமாயிடறே! என்னால் முடியல்வியே!” 'எல்லாம் முடிஞ்ச வரைக்கும்தான். எண்ணிம் அழுக்கில்லாமல் இருந்தால் சரி.” மெளனம். சற்றுநேரம் கழித்து, அமலி, துரங்கிட்டையா?” 'இல்லே, என்ன வேணும்?" 'எனக்கு மனசு சரியில்லே. இல்லை, நீ எழுந்திருக்க வேண்டாம்; விளக்கைப் போட வேண்டாம்!' 'திரும்பத் திரும்ப நம்ம பசங்கதானே! ஏன் வீண் கவலைப்படறேள்?’’ 'தாஸ் நிலத்தை விற்கக் கெடுபிடி பண்ணுவான் போலத் தோணறது. நான் சம்மதிக்காமல் போனால், தன் பங்கைக் கேட்பான்போல இருக்கு." "சரி, கொடுத்துடுங்கோ!' 'ஒருத்தன் கே ட் டா ல் மத்தவன்களும் கேட்க வேண்டியதுதானே? பெண்களுக்கும் இப்போ பங்கு உண்டு.”

  • சரி, பிரிச்சுக் கொடுத்துடுங்கோ.” "ஜடம், ஜடம்: அப்புறம் நம் பங்கு என்ன இருக்கும்? நாக்கை வழிச்சுக்க வேண்டியதுதான்."

'இதோ பாருங்கோ, நீங்கள் நினைக்கற மாதிரி குழந்தைகள் அத்தனை கெட்டவா இல்லே. நாமும் அவாளை நம்பணும்! கவளம் தொண்டையில் சிக்கினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/243&oldid=741594" இருந்து மீள்விக்கப்பட்டது