பக்கம்:அவள்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த் வ னி கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி, உதயத்தின் முற்பொருள் நீ. உனக்கு அழிவில்லை. நான் இன்பத்தில் வாழ்த்தியும், துன்பத்தில் தாற்றியும் நீ என்றும் பெருகு வாயாக. நீ உமிழ்ந்த மாணிக்கமாய் ஒளியைத் திரும்ப விழுங்க நீ திருவுளம் பற்றிய தருணமே. காலம், இடம், பொருள், தவம், தத்துவம் என என் ப்ரக்ஞை கட்டியாடும் வேடங்கள் அனைத்தும் என் அந்தத்தில் குலைந்து அவிந்து உன்னில் அடங்கிவிடும். ஓம் சாந்தி. 露 孪 常 உன்னை நான் அறியுமுன்னர் என் உள்ப்ரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய். 密 霹 紫 இன்று காலை ஆபீஸுக்குத் தாமதமாகிவிட்டது. மின்சார வண்டி திருட்டு மூட்டைகள் இறங்கும் திருப்பம் தாண்டிக் கோ ட் ைட ஸ்டேஷனின் மதிற்கவர்கள் தாண்டி, முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கையில், 'திடீர் ப்ரேக்" போட்டு நின்ற சடக்கில், நாங்கள் பின் பல்டியடிக்காமல் தப்பித்தது எங்கள் அதிர்ஷ்டம். நான் இருந்த பெட்டி நடுப்பாலத்தில் நின்றது. சுற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/246&oldid=741597" இருந்து மீள்விக்கப்பட்டது