பக்கம்:அவள்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


多伊座 லா, ச. ராமாமிருதம் வழியில்லையே. நாங்கள் கிழங்கள். இன்னும் கிழங்கா வளைய வரோமே, இந்தக் கொடுமையெல்லாம் பார்க் கணும் கேட்கணும்னு இன்னும் எங்கள் தலையில் என்னென்ன எழுதி வெச்சிருக்கோன்னு தலையிலடித்துக் கொள்ள விஷயமாச்சு. ஆனால் இன்று செத்துப்போனவன் சின்ன வயது இல்லை. ரயில் தள்ளிவிட்டது. அறியக்கூட அவனுக்கு நேரமிருத்திருக்காது. இல்லாவிடில் முகத்தில் எப்படி அத்தனை சாந்தம்: உதட்டோரம் சிறு முறுவலின் முன் நிழல் கூட. இன்பம தந்த ஏதோ ஞாபகத்தில் தன்னை யிழந்து வண்டி வந்ததுகூடத் தெரியாமல், பா ல ம் தாண்டுகின்றேன் என்று சமுத்திரத்தையே தாண்டி 'விட்டான். -: ஆமாம், அக்கரையில் காத்திருக்கும் காரிருளே உனக்குக் கையென்றும், காலென்றும், முலையென்றும், தொடை யென்றும் தனியில்லை, அவனை நீ என்ன சைகை எப்படிக் காட்டி உன்னுள் வலித்துக் கொண்டாய் எனும் வியப்பில் எண்ணம் திளைக்கத் திளைக்க நெஞ்சு முள்மேல் மீன் நெளிந்து வளைந்து மாட்டிக்கொள்ளாமல் துள்ளி விளையாடி அடிவயிற்றின் ஒளி மருட்சி காட்டுகிறது. ஆனால் நூல் மா த் தி ர ம் விட்டுக்கொண்டே போகிறது. இந்த நூலுக்கு மாத்திரம் திரெளபதியின் துகில் போல் எப்படி ஒ ய | த இந்நீளம்? இல்லை நடுவிலேயே அறுந்து போனதைத் தான் எல்லையே இல்லாததாய் நினைத்துக் கொண்டிருக்கிறேனா? சே, சே, இல்லை இல்லை; இல்லவே இல்லை. இந்த நூல் அறவே அறாது. இது அறுந்துபோனால், பிறகு என்னதான் இருக்கிறது. என்ன இருந்துதான் என்ன? பிடிக்க மீனுமில்லை: மீன் பிடிக்க ஆளுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/248&oldid=741599" இருந்து மீள்விக்கப்பட்டது