பக்கம்:அவள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 203

இது இருளின் நரம்பு.
எண்ணத்தின் கறுப்பு மணிக்கயிறு!
வானத்தின் நீலத்தினின்று உரித்த பொற்சரடு
நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம்.
பிறவியின் ஒளி.
வானத்தின் நீலத்தினின்று உரித்த சரடு.
நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம்.
இதுதான் என் பிறவியின் தேஜஸ்.

***

ஆனால் நான் நூலைக் களைந்து வருடங்களாகி விட்டன.

அம்மாவின் தகனத்திற்கு மறுநாள் சடங்குகளின் போது மாரைத் தடவினால் பூணூலைக் காணோம்! சட்டையோடு கழன்று கோட் ஸ்டாண்டி'ல் தொங்கிக் கொண்டிருக்கிறதா? இருக்காது, நேற்று நான் சட்டையோடு படுக்கவில்லையே! ஆ! புரிந்தது. நேற்று அம்மாவைப் பொசுக்கிவிட்டுக், காட்டிலிருந்து வந்து குளத்தில் மூழ்கியபோது ஜலத்தில் நழுவியிருக்கும்; வேறு வழியே இல்லை.

பூணூல் போன வழி புரிந்ததுமே கூடவே நெஞ்சில் ஏதேதோ கதவுகள் திறந்துகொண்டே போயின.

வெடுக்கென நான் எழுந்த வேகத்தில் மடியிலிருந்த பணம் தரையில் சிந்திற்று. சில்லறைக்குத்தான் எத்தனை இரைச்சல்:

சாஸ்திரிகளே, நான் சடங்குகளைச் செய்யப் போவதில்லை."

வாத்தியாருக்கு வாய் தொங்கிற்று. 'ஏன் திடீர்னு இப்போ என்ன?...'

'சாஸ்திரிகளே, திடீர் என்று நேர்பவைகள்தாம் திடம், நிஜம். படிப்படியாய் நேர்வது மாறுதல், பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/249&oldid=1497166" இலிருந்து மீள்விக்கப்பட்டது