பக்கம்:அவள்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28ே லா. ச. ராமாமிருதம் இரு குட்டிகள்-ஒன்று உடலே பட்டுக் கறுப்பு: இன்னொன்று காது மடிகளில் மாத்திரம் கறுப்புத்திட்டுஇன்ப முனகல்களுடன் பாலுண்டு கொண்டிருந்தன. ஆடு ஒன்று அருகே புல்லை மேய்ந்துகொண்டிருந்தது. நாய் குரைக்கவில்லை. ஆட்டின்மேல் பாயவில்லை. நாயும் ஆடும் சினேகம் போலும். எத்தனைநாள் சினேகமோ? 岑 器 岑 அழுகிறேன் சிரிக்கிறேன் பேசுகிறேன் பேசாமலிருக்கிறேன் ஆத்திரப்படுகிறேன் அமைதியாயிருக்கிறேன் அசைகிறேன் அடங்குகிறேன் சகுனம் சம்பவம் நம்பிக்கை கேள்வி பதில் சமாதானம் நன்மை புண்ணியம் தீமை பாவம் எல்லாமே த்வனிகள் தான் மெளனமும் ஒரு த்வனிதான் ஒலியே நீ மோனத்துள் புகுந்து கொண்டதால் உன்னைக் கேட்கவில்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/252&oldid=741604" இருந்து மீள்விக்கப்பட்டது