பக்கம்:அவள்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 209 கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயோ? எல்லாம் நெஞ்சு நிற்கும் மீட்டலுக்கேற்ப, ஆனால் அறிவது, கேட்பது இவையெல்லாம் என்ன வெறும் வார்த்தைகள்தானே! அவைகளின் பொருளும் உண்டான பொருளல்ல. அவ்வவ்வார்த்தை வரம்புள் சொல் ஒட்டம் நீடித்தவரை நாம் நமக்கு ஆக்கிக்கொண்ட பொருள். ஆனால், சொல்தாண்டிய உயிர், அவ்வுயிரையும் குடித்து உயிருடன் உயிர்தந்த பொருளையும் விழுங்கிய இருள் பற்றி நாம் என்ன கண்டோம்!!? 岑 岑 k என் தாயும் நம்பிக்கைகளைக் களைந்தவள்தான். "ஆமாம், உனக்கு நினைவு தெரிந்தநாள் முதலாய் நீயும்தான், உன் தகப்பனுக்கு சிரார்த்தம் பண்ணிப் பண்ணி உன் ஆயுசிலும் பாதிக்குமேல் ஆயாச்சு. நீ என்னைவிடக் கிழமாயிட்டே. ஆனால் உன் அப்பா இன்னும் உன் பிண்டத்துக்குக் காத்திருக்கார்னு உனக்குத் தோனறதோ? என்னவோ அப்பா எனக்கு நம்பிக்கை யில்லே மனுஷன் வேறு எங்கே பிறந்து? இன்னும் வேறெந்தக் குடியைக் கெடுந்திண்டிருக்கானோ? நீ முழிச்சுப் பார்த்தால் நான் பயந்து டமாட்டேன். உன் அப்பாவை உனக்குத் தெரியுமா, எனக்குத் தெரியுமா? உன் அப்பா என் கழுத்தில் கட்டியது தாலியா அது, பாம்புன்னா! பின்னே என்ன? என்னவோ என்னை இத்தனை கெடுத்ததற்கு எனக்குத் தெரிஞ்சு உன் அப்பா வால் அமைஞ்ச ஒரே நல்ல காரியம் உன்னைக் கொடுத்தது தான். நீ மாத்திரம் எனக்கென்ன, நான் பெண்ணாய்ப் பிறந்ததுக்கு மலடு இல்லேன்னு நிருபிக்கத்தானே!" அ.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/253&oldid=741605" இருந்து மீள்விக்கப்பட்டது