பக்கம்:அவள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 213


வகையிலோ, வேகத்திலோ, மூச்சுக்கூட விட்டு வாங்காத ஓயாத கூச்சலிலோ, வசவின் கதியில் அஞ்சாது இறங்கும் அடிமட்டத் துணிச்சலிலோ அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

இருந்தாற் போலிருந்து, திடீரெனக் கை கலந்து விட்டது. பானையும் தவலையும் உருண்டன. ஒருவர் கூந்தலை ஒருவர் பிடித்து உலுக்கி, முகத்தைப் பிராண்டி, தரையில் உருண்டனர். இந்த ஆரண்ய தர்மத்துக்கெதிர். மார்த்துணி, மானம், மர்மம் எனும் மனித முலாமெலாம் எங்கு நிற்க முடியும்: இருவருக்கும் மூச்சு இறைக்கின்றது. இருவர் முகமும் ரத்த விளாறு. ஆனால் கூந்தல் மேல்பிடி இருவரும் விடவில்லை.

"ஏன் 'யா!'

புளித்த கள் நெடி பின்னாலிருந்து மோதியதும் வயிற்றைக் குமட்டிற்று. குத்து மீசைமேல் மங்கிய தணல் மேட்டு விழிகள் கனன்றன.

"பார்த்தா வெள்ளைச் சொக்கா உடுத்து பெரிய மனுசனாட்டம் இருக்கே, வயசானவனா இருக்கே. புருவங்கூட நரைச்சுப் போச்சு சண்டையை விலக்காட்டியும் வேடிக்கையா பார்க்கறே?"

இவன் ஏதோ வலுச்சண்டைக்கு அலைகிறான். அது தான் இவன் பிழைப்பு பிழைப்பில்தான் எவ்வளவு விதம்! எங்களைச் சுற்றி 'கொல்'லென்று கூட்டம் கூடி விட்டது. வேடிக்கை பார்ப்பவர் பாதி அவனைச் சேர்ந்தவர் பாதி. ஓநாய்க் கூட்டத்தின் ஒரே முகமான பசி ஏக்கம் போல், அவர்கள் முகத்தில் ஒரு வார்ப்பாய்க் காணும் சண்டைக்கு ஏக்கத்திலிருந்தே தெரிகிறது.

"வயசானவனாம் வயசானவன்! இந்த வயசானவங்க, வயசுமேலே பாரத்தைப் போட்டுட்டு பண்ணற கோஷ்டத்தைப் பத்தி என்கிட்டே கேளு அண்ணே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/257&oldid=1497304" இலிருந்து மீள்விக்கப்பட்டது