பக்கம்:அவள்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 2:15 நான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்ததுமே, கும்பலில் தானே ஒரு சந்து பிரிந்தது. நான் சாவதானமாய் அதன் வழி நடந்து வெளியேறி, தெருவைத் தாண்டினேன். என்னை யாரும் பின் தொடரவில்லை 案 寧 என் சிரிப்புப் பற்றி ஒரோரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள்தான் எத்தனை!” ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதினின்று உதிர்கின்றன. - இன்னொரு சமயம் நட்டுவாக்காளிகளும் குளவிகளு மாய்க் குதிக்கின்றன. ஒரு சமயம் பொன் வண்டின் ரக்கையடிப்பு. ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி. ஒரு சமயம் கண்ணிர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணி கிணி. கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத் தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன். அடித்த பஞ்சாகிப் பிறகு அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடரியின் கூர் முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள். அன்றுஒன்று சொல்கிறேன். அன்று-என் கையில் எனக்கு நாளும் கிழமையும் அற்று என்றோ ஆகிலிட்டது. அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/259&oldid=741611" இருந்து மீள்விக்கப்பட்டது