பக்கம்:அவள்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 லா. ச. ராமாமிருதம் 'ஓ ராஜு 12 &lso sorry. உன் அம்மா சொன்னாப் போல, உன்மேல் நான் ஏன் கை வைத்திருக்க வேணும்? நான் பெற்றதால் என் வளர்ப்பிலேயே உன்னை நான் உருவாக்கப் பார்ப்பது நியாயமா? ராஜு நீ பெரியவனா யிட்டே உன்னிடம் விட்டுப் பேசலாம் என்றே நினைக் கிறேன். இந்த மனித விதைக்குத்தான் இந்த மகத்துவம் உண்டு. ஒரே மரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளை விடும். அவரை பூக்கும், பாகல் படரும். இந்த உண்மை சமயத்தில் மறந்து விடுவதால்தான் வருகிறது துயரம், சண்டை, மனஸ்தாபம் எல்லாம்!" வீட்டுக்கு வாங்கோ அப்பா!' ராஜூ முனகினான். சேகர் இந்த ஒருநாள் ராத்திரியில் உங்களைக் காணாமல் "பக்’னு பாதி வாங்கிட்டான். வாய்விட்டால், அழுதால் கூடத் தேவலை, ஊமையடிப்பட்டுத் தவிக்கிறான்.' சேகருக்கு என்மேல் பட்சம் கூடத்தான். என்மேல் காலைப் போட்டுக் கொண்டால்தான் அவனுக்குத் துக்கம் வரும். 'கண்ணன் என்ன பண்ணுகிறான்?' 'கண்ணன் ரெண்டு தடவை அப்பா இன்னும் வல்லியான்னு கேட்டான். அப்புறம் பந்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போயிட்டான்.” எனக்குத் தெரியும். கண்ணன் சமாளித்துக்கெண்டு விடுவான். எல்லோருமே சமாளித்துக்கொண்டு விடுவார்கள். நாள் ஆக ஆக, உடலில் உப்பும் தண்ணும் ஊற ஊற, சதை தடிக்கத் தடிக்க, எல்லோருமே எல்லாவற்றையுமே சமாளித்துக்கொண்டு விடுவார்கள். அம்மா என்ன பண்ணுகிறாள்?-என்று தான் கேட்க வில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/266&oldid=741619" இருந்து மீள்விக்கப்பட்டது