பக்கம்:அவள்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 லா. ச. ராமாமிருதம் அம்மா! அம்மா தாத்தா நொம்ம நன்னா குத்து விடறார். நீ பாரேன்' x இவள் இவனுக்குத் தாயாரா? அக்கா என்றாலே பொருந்தும். பையன் முகத்துப்பால் இவள் முகத்தில் இன்னும் காயவில்லை, இவளை எங்கேயாவது பார்த் திருக்கிறேனோ?” அவள் புன்னகை புரிந்தாள். - சேகருக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சுட்டால் போதும், நேரே தலைமேல்தான் சவாரி.' நான் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நின்றேன். இவளை நான் எங்கு பார்த்திருக்க முடியும்? தாத்தா குத்து விடுங்கோ தாத்தா! அம்மா பார்க் கணும்' . . - அவள் அவன் வாயைப் பொத்தினாள். 'உஷ் மாமான்னு சொல்லணும் சேகர்!" அன்றிரவு நான் குளித்துவிட்டு, ஹோட்டலுக்குக் கிளம்ப சட்டையை மாட்டிக் கொண்டிருக்கையில், ** 57 š–làrt i pł’’ . . . . திரும்பினேன்; அறை:வாசற்படியில் சேகர் நின்று கொண்டிருந்தான், ை கயி ல் ஒரு தட்டுடன். அதில் ஒன்றன்மேல் ஒன்றாய்க் குவித்த இரண்டு மூன்று பொரித்த அப்பளங்கள். - 'அம்மா கொடுத்துட்டு வரச்சொன்னாள். ஈர அப்பலாம். இன்னிக்கு இடடாளாம்.' அவனைத் தூக்கிக்கொண்டேன். பையன் இறக்கை மாதிரியிருந்தான். - “Thank you Sekari Tell your Mummy I thank her!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/270&oldid=741624" இருந்து மீள்விக்கப்பட்டது