பக்கம்:அவள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228 லா. ச. ராமாமிருதம் 0h my god! இந்தத் தும்பைத் தலையும் நரை புருவமும் படுத்தும் பாடு: "அதேமாதிரி உங்களுக்கம் என்னால்-எங்களால் assmag gogotears don't hesitate—” 'உன்னால்-உங்களால் எனக்க ஆகவேண்டியது நீங்கள் என்னைச் சும்மா விட்டுவிடுவதுதான். நான் வேண்டுவது தனிமை' என்று இவனிடம் சொல்ல முடியுமோ? "ஒ அதற்கென்ன?' என்று சொல்லி எழுகின்றேன். அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு என்னுள் வீற்றிருக்கும் சிரிப்பு என்னைப் பார்த்துச் சிரிக்கின்றது. r : * 苓 நான் தனிமை, தனிமை என்கிறேன். 2. ஆனால் உண்மையில், உண்மையான தனிமையைச் சாதிக்க முடியுமோ? தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டிவிடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ? - ஏனெனில், நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும் எப்பவும் என்னோடு இருக்கிறேனே! எனக்கும் நான் நாஸ்திதான் தனிமை. துறந்துவிட்டதால் மட்டும் தனிமை வருமோ? ஒன்றைத் துறந்தால் ஆற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்துவிடுகின்றது. சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை. உண்மையான துறவுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/272&oldid=741626" இருந்து மீள்விக்கப்பட்டது