பக்கம்:அவள்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 23.5 'ஏன் நீங்கள் போய்விட்டால் தினம் வீட்டில் சுட்ட அப்பளமும் கொட்டு ரளமும் இருந்தால் உங்களுக்குத் தேவலையா?” பேச்சை மாற்றினேன். "ராதை ஒரு பத்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். இங்கேயே இரு உனக்குப் பிடித்தமான பேப்பர் ரோஸ்ட் மசாலா வாங்கி வருகிறேன். ' அவள் புன்னகை புரிந்தாள். விருந்தாளியைக் கவனிக்க வேண்டியது நியாயம்தானே!' ஆனால் நான் திரும்பி வருவதற்குள் அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் வாசலில் நுழைகையிலேயே இரு குரல்கள் கேட்டன. - "என்ன மாமா, மாமி உள்ளூரிலே இருக்காள்லு எனக்கு நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே. நீங்கள் ஒட்டலுக்குப் போய்த்தான் வாங்கி வரணுமா? நீங்கள் வாசவில் இருந்தே குரல் கொடுத்திருந்தால், சேகர் என்னிடம் சொல்லியிருப்பானே!" 'ஏண்டி க ல் யா னி! மாமாவைப்பத்தி நானே இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. எனக்குமேல் நீ ஆசைப்படறையே!' அந்தப் பெண் சட்டென்று ராதை பக்கம் திரும்பி னாள். ஆனால் ராதையின் கவனம் முழுவதும் அவள் கைக் காப்பி டம்ளரின் மேல் ஆழ்ந்திருந்தது. (எதிர் வீட்டுக் காப்பிதான் அது. நான்தான் வாங்கி வர வில்லையே! இன்று காலை கைதட்டி கண்ணாடி டம்ளர் உடைந்துவிட்டது.) - 'மாமா நாங்கள் கோலிலுக்குப் போகிறோம். நீங்களும் வரேளா? கேட்க வந்தேன். வந்த இடத்தில் மாமியைக் கண்டேன்.'"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/279&oldid=741633" இருந்து மீள்விக்கப்பட்டது