பக்கம்:அவள்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 237 சொல்வேள் என்பதும் எனக்குத் தெரியும். பெண் மாதிரி என்பேள். பெற்றால்தான் பெண்ணா என்பேள். ஆனால் ஒண்னு சொல்றேன், இது எல்லாத்துக்கும் அடிப்படை ஒன்றுதான். அதில்தான் இதெல்லாம் போய் முடியும்.” எதில்?’’ சபலம்.' • ‘Bore!” 'ஒப்புக்கொள்கிறேன். நான் வந்த காரியத்தைப் பேசலாமா?’’ - "ஓ! பிஸினெஸ் மேல்தான் வந்திருக்கிறாயா?" பின் நம்மிடையில் இனி வேறே என்ன இருக்கு? இந்த மாதம் முன்னூறு ரூபாய் கூட வேணும்.' எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "இந்த மாதமா? இந்த மாதத்திலிருந்தா?' 'அதுவும் சம்மதம்தான்.” 'என் சம்பளம் ராஜூ சம்பளம் - இரண்டு வந்தும் போதவில்லையாக்கும்!" 'நீங்கள் என்னவோ தலையைக் கொய்து என் கையில் கொடுத்துவிட்ட தாய் எண்ணிண்டிருக்கலாம். ஆனால் குடும்பம் பிரம்ம கபாலமாயிருக்கே! உங்கள் தலையை நீங்கள் தான் நிரப்பியாகணும்.' "என் தலை முன்னூறு ரூபாய் கேட்கிறதா' "தலை பெரிய தலையாச்சே அதுவும் ஆறு மாதங் களுக்கு ஒருதடவை வெட்டிக்கிற தலை எப்படியிருக்கும்: *மட்டை உரிக்காத தேங்காய் மாதிரி, சிங்கத்தலை." "இவ்வளவு பெரிய தொகைக்குத் திடீர்னு எங்கே போவேன்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/281&oldid=741636" இருந்து மீள்விக்கப்பட்டது