பக்கம்:அவள்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 லா, ச. ராமாமிருதம் 'என்னைக் கேட்டால்? விஜிக்கு இன்னும் பத்து நாளில் பிறந்த நாள் வரது." எனக்கு எரிச்சலாய் வந்தது. "என் இறந்த நாள் வந்தால் இன்ஷஅரன்ஸ் பணம் வரும்-' 'வரலாம். அது என்னிக்கோ? அதுவும் அதுக்குள் நீங்கள் வேறு யாருக்காவது எழுதிவைக்காமல் இருந்தால், நீங்கள்தான் உறவு மனுஷாளை விட்டுட்டு, புதுசு புதுசா உறவு பிடிக்கறேளே? சரி நான் வரேன். விஜி என்னைத் தேட ஆரம்பிச்சுடுவாள். இன்னும் இரண்டு நாள் கழிச்சு ராஜுவை ஆபீசுக்கு அனுப்பறேன்.' - அவள் போன பின்னரும் நான் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் எந்நேரமாயிற்றோ? என்ன யோசனையி விருந்தேன் என்றுகூடத் திட்டமாய்த் தெரியவில்லை. ஆகையால் திடீரென ஒளி வெள்ளம் என்னைச் சூழ்ந்து கண்ணைப் பறித்ததும் கண்களைப் பொத்திக் கொண்டேன். “ại I am sorry, a šis swan disturb Lusit Gypsurfr? ' நான் விழித்ததும் கலியாணியின் கணவன் வாசற். படியில் நின்று கொண்டிருந்தான். 'நான் உங்களோடு கொஞ்சம் பேசலாமா?" 'இன்று என் ராசி என்ன ராசியோ?” இப்பத்தான் ஒருத்தி பேசிவிட்டுப் போனாள். *வா அப்பா, உட்காரு என்ன விசேஷம்?" அவன் முகம் சுண்டியிருந்தது. எனக்கு மாற்றலாகியிருக்குது, ஸார்! இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பியாகணும்.' இ § எனக்கு மார் லேசாக வலித்ததோ? அப்போ விமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/282&oldid=741637" இருந்து மீள்விக்கப்பட்டது