பக்கம்:அவள்.pdf/287

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 罗篷3 ஸ்-நாதனி. ஸ்டேஷன் மாஸ்டரின் அறையில் டெலிபோன் மணி யடித்தது. - ஆனால் அங்கு மட்டுமல்ல. நினைவின் தேன்கூட்டில் வருடங்களின் மிதி காலடியில் புதைந்துபோன ஏதோ ஒரு பாதாள அறை யிலிருந்து மணி ஒலி கேட்கிறது. ஸ்-நாதனி என்னைக் கூப்பிடுகிறாள். 塔 楼 。家 என் பேரிஷ்டம் என் அறையின் தனி விசேஷம் அதன் முழு இருட்டு. ஜன்னலின் பொருத்தம் காற்றுக்குப் பங்க மீலாது தெரு வெளிச்சம் துளிகூட உள் விழாது. என் உடலேனும் எனக்கிலாத நிலையை உயிரோடு இருள் மூலமேனும் பாவனையில் ருசிக்க என் அறை எனக்கு ஒரு வழி. இம்முறையில் இருளே உன்னை ஒரு வழியில் புரிந்து கொண்டது சரியோ என எனக்கு நீ சொல். இல்லை, நீ சொல்லமாட்டாய். நான் எனக்குச் சொல்லிக்கொள்வதே நீ எனக்குச் சொல்வதுதான். நீ சொல்லமாட்டாய். இமையா உன் விழி கொண்ட உன் விலங்கு விழிப்புத்தான் உன் விளக்கம். அகன்ற சிறகுகளை விரித்து நீ என் மார்மேல் இறங்குவது உணர்கிறேன். உன் கழுகுக்கால்கள் என்னைக் கல்வுகின்றன. பிறகு என்னை எங்கு எடுத்துச்செல்கிறாய்? இச்சமயம் நான் உன் குஞ்சா? உன் இரையா? ஏனெனில் உன் குஞ்சும் உன் இரையும் உனக்கு ஒன்று. தான். எதையும் விழுங்குவது உன் தன்மை. ஒன்று என்பதே உன் ஒரே குணம்; ஆகையால் அருங்குணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/287&oldid=741642" இருந்து மீள்விக்கப்பட்டது