பக்கம்:அவள்.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 24க் மாலை ஆபீஸிலிருந்து வந்ததும், ராதை ஒரு மூட்டையை ஏந்தி வந்து என் கையில் திணிக்கிறாள். ஸோப்பு நுரைபோல் குழந்தையின் பால் சதை என்மேல் வாய்வரை எழும்பி, என் அணைத்த கைகளை நிறைத்து வழிகின்றது. 'நாம் மூணுபேரும் சேர்ந்து எப்போ போட்டோ எடுத்துக்கறது?’ என் முகத்துள் அண்ணாந்து பார்க்கும் ராதை முகமே ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறது. சில நாட்களாகவே தொடர்ந்து நேர்ந்துகொண் டிருக்கும் இந்தச்சடங்கு எனக்கு இன்னும் அலுக்கவில்லை. ஆனால் ராதையின் ஆசையை நிறைவேற்ற எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இன்றேனும் வீடு சேர்ந்ததும் ஒரு டாக்ஸியை அமர்த்திக்கொண்டு டெலிபோன் மணி அடித்தது. 'ஹல்லோ?* "யார், மிஸ்டர் ஸாலிக்ராம்? பெண் குரல். “Speaking.” 'அந்தப் பக்கத்திலிருந்து நீண்ட பெருமூச்செழுந்தது. "மிஸ்டர் ஸாலிக்ராம். excuse me, நீங்கள் ரொம்ப Gouamoussujö$6.5irsammo Am I disturbing you?” 'அப்படியொன்றுமில்லை. இன்னும் பத்து நிமிடங் களில் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்.” 'அப்போ, இந்தப் பத்து நிமிஷங்களும் நமக்கே சொந்தம்தானே!” "நீங்கள் யார் என்று தெரியவில்லையே!” 'ஆ கண்ணாடி டம்ளர் அடியில் உருளும் கரையாத ஐஸ்கட்டி போல் அடக்கிய அவுட்டுச் சிரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/289&oldid=741644" இருந்து மீள்விக்கப்பட்டது