பக்கம்:அவள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 லா. ச. ராமாமிருதம்


"என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாய்த் தெரியும். உங்களுடன் பேசுவதற்கு ஏறக்குறைய மூணு மாதங்களாய் என் மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் நம்பினால், நம்பாவிட்டால் எனக்கென்ன? என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கையில் எனக்கு நான் தானே சாகூி! ஆனால் தன்னிலும் பெரிய சாகூி ஏது?"

"--"

"ஹல்லோ ஹல்லோ!"

"Yes?”

"ஓ இருக்கிறீர்களா? சந்தடியே காணோமே, line கட் ஆகிவிட்டதோ என்று பார்த்தேன்.”

"இல்லை யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு ருசியாய்ப் பேசத் தெரிந்தவர்களில் எனக்குத் தெரிந்தவர் யார்?"

"நான் சொல்லப் போவதில்லை."

"ஏன்?”

"நான் யார் என்று யோசித்துக்கொண்டிருக்க, உங்களுக்கு இன்றிரவு பூரா, ஏன், இன்றிரவிலிருந்தே உங்கள் ஆயுசு பூரா நேரம் இருக்கிறது. உங்களை ஒரு தயவு கேட்கிறேன். என்னை யாரென்று அறிய நீங்கள் முற்பட வேண்டாம். மிஸ்டர் ஸாலிக்ராம்-உங்கள் பெயர் எவ்வளவு அழகாயிருக்கிறது! நீங்கள் என்னை வெட்கம் கெட்டவள் என்றுதானே நினைக்கிறீர்கள்?"

"இல்லை! இல்லை!!"

அந்தப் பக்கத்திலிருந்து பெருமூச்செழுந்து என்மேல் சுழன்று விளையாடிற்று.

"நீங்கள்-"

"என்னை 'நீங்கள்' என்காதீர்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/290&oldid=1497574" இலிருந்து மீள்விக்கப்பட்டது