பக்கம்:அவள்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 லா. ச. ராமாமிருதம் இந்த முள் ஏன் நகரமாட்டேன் என்கிறது? அவள் டெலிபோன் பண்ணுகிறேன் என்று சொன்னால் பண்ணு வாள் என்று நிச்சயமா? அவசியமா? சீ எனக்கு ஏன் இந்த அல்ப ஆசை இன்னும் பத்து நிமிடங்கள் ஆனதுமே, ! will get out. இன்றைக்கு நிச்சயமாய் குழந்தையைப் போட்டோ எடுத் டெலிபோன் மணியில் தனி கணிர். பதறி எடுத்தேன். • ‘Helios” "ஒ நீயா? அவள் குரலைக் கேட்டதுமே எனக்கேன் இவ்வளவு மகிழ்ச்சி? 'ஏன், வேறு யாரையேனும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தீர்களா? sorry, போனை கீழே வைத்து விடிட்டுமா?" “@@soo gåcoal. don't cut the line please-please!!” "சும்மாச் சொன்னேன். இந்த வேளைக்கு நானும் தானே காத்துக் கொண்டிருக்கிறேன்!' எனக்குத் தொண்டையை அடைத்தது. * Heilio??? "இங்கேயேதான் இருக்கிறேன் உன் பேர் என்ன?” 'என் பெயருக்கேன் ஆசைப்படுகிறீர்கள்? நீயும் நானும் எனும் உறவுக்குமேல் பெயர்கள் பெரிதா?” 'இது என்ன வேதாந்தமா, விரக்தியா? இப்படிப் பேசிக்கொண்டே போனால் இதற்கு முடிவேது?” "ஆம். அலுப்பற்ற விஷயத்தின் முடிவற்ற விளிம்பில் தாம் நின்றுகொண்டிருக்கிறோம்.' Please, உன் பெயர் என்ன? "என் பெயர் என்னவென்று. சொல்லலாம்? nதா, லக்ஷமி, ராமசுப்பி, வாலாம் பாள் இந்த மாதிரி ஏதேனும் சொல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/292&oldid=741648" இருந்து மீள்விக்கப்பட்டது