பக்கம்:அவள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


烹赏溪 சீகாந்த் க்ளாஸ்ஸுக்குப் போயிருக்கிறான். 'சீகாந்தைப் பாக்கனுமே! அவள் கண்கள் சஞ்சவிக் கின்றன. எனக்குப் பயம் வந்துவிட்டது. இவள் பாட்டு வைத்தால் என்னால் எப்படி சமாளிக்க முடியும்? நல்லவேளை, பைக் சத்தம் கேட்கிறது. அவள் முகத்தில் கர்ர்’- வெளிச்சம் வந்துவிட்டது. 'சீகாந்த்! சீகாந்த்!” வெளியே ஒடுகிறாள், தோளை குலுக்கிக்கொண்டு. 苓 # ※ என்னதான் என் தேடல் தத்துவமானாலும், இதை மறுக்க முடியாது. சமுதாயத்தில் பிறந்து, சமுதாயத்தில் வளர்ந்து, சமுதாயத்தில் மடிகிறோம். நான் சமுதாயத் தைத் துறக்கச் சித்தமாயிருந்தாலும், சமுதாயம் என்னைச் சும்மா விடாது. கடமை என்கிற கட்டாயம் கொண்டு சமுதாயம் தன் உறவுகளைப் பாதுகாத்துக் கொள்கிறது. அபூர்வமான வேளைகளில், கடமையும் ஆன்மிகமும் ஒற்றுமையில் சந்திக்கையில், நல்வாழ்வு, நல்லுணர்வு அந்த சமயத்துக்கு நேர்கின்றது. ஆனால் இந்த ஆனந்தம், பரவச நிலை நிரந்தரமாக யிருக்க முடியாது. எண்னத்தை முயற்சியால் நிறுத்தி வைத்துக்கொள்ள முடிந்தாலும் முடியலாம். ஏதோ ஒரு கடினம், தற்செயலில் அமைந்தால் உண்டு. ஆனால் அதன் தூய்மையும் அனுபவமும் உயிரின் கதகதப்புடன் அந்தந்த சமயத்துடன் திருப்தி அடைவதே சரி, வாழ்க்கையில் தருணங்கள்தாம் உண்டு. அவைகளை நம்பித்தான் வாழ்கிறோம். வாழ முடியும். என்ன தே டி னே ன், தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போது குழப்பமாயிருக்கிறது. கேள்விக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/30&oldid=741657" இருந்து மீள்விக்கப்பட்டது