பக்கம்:அவள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 261

மகராஜி, அத்தனை ஆராதனைகளையும் ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள்!

அவர் உப்பு இல்லாமல் உபவாஸம் இருக்க முயலவில்லை. கிடக்கைக்கு மான்தோல் தேடவில்லை. அல்லது கட்டாந்தரையில் படுக்க ஆரம்பிக்கவில்லை. ஏன் என்றால் யாரேனும் கேட்டிருந்தால் எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லையே! என்று உண்மையைத் தான் சொல்வியிருப்பார். அவருக்கு இதுபோல் ஆராதிப்பது பிடித்தது; ஆராதித்தார்.

தினம் முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையேனும் அம்பாளுக்கு ஒரு சொம்பு நிறைய பாலாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும். இந்த ஆசையில் உள்ள நெஞ்சீரல் யாதெனில் சுத்தமான கறந்த பசும்பாலுக்கு எங்கே போவேன்? (குடம், பைப்பால் கிடைக்கலாம்.) இது கலப்பட யுகம். ஒரு செம்பு நிறைய நூரை வழிய ஒரே மாட்டுப் பசும்பால்...டவுனில் எங்கே போவேன்?

நாளடைவில் இந்த நெஞ்சீரல் விசிறிக்கொண்டு, வீசிக் கொண்டு, விபரீத ஆசைக்கனல் தகிக்கத் தலைப்பட்டது. நாமே ஒரு பசுமாடு வாங்கிவிட்டால் என்ன? பின் யோசனையில் டவுனில் வாடகை வீட்டில் மாடு வைத்துக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்யப்படுமெனத் தோன்றவில்லை.

ஆனால் அம்பாளுக்கு சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்து விக்ரஹத்தின்மேல் பாலின் வெண்மையின் வழிதலினின்று அவளுடைய சிரித்த முகம் வெளிப் படுவதைப் பார்க்க வேணுமே!

அந்த அழகைப் பார்ப்பதற்கு எந்தப் பாலையேனும் ஊற்றிப் பார்க்கலாமே என்று ஒரு சமாதானம் மனதில் எழுந்தபோதிலும் அதே மனம் ஏற்க மறுத்தது. இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/305&oldid=1497849" இலிருந்து மீள்விக்கப்பட்டது