பக்கம்:அவள்.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்புள்ள ஸ்நேகிதிக்கு 279 'மிஸ் அமிர்தவல்லி.' 'அமிர்தவல்லியின் மறுகல் அமலி. அமளி என்றிருந் தால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.' "நெவர் மைண்ட்.' "மிஸ் அமிர்தவல்லி.' 'கால் மி அமலி.” "மிஸ் அமலி! உங்களிடம் கட்டில் விற்பனைக்கு இருப்பதாக அறிகிறேன். அதை நான் பார்க்கலாமா?" 'ஒ. பார்க்கலாமே!” விலை?” என்று இழுத்தேன். 'ஓ டோனட் பாதர். ஏதேனும் குடுத்தால் போச்சு. விலை நாம்-கேவாஸ், ஒரு பாட்டுக்கு உங்களுக்கு அது கிடைக்கும். உங்களுக்குப் பாட வராவிட்டால் ஒரு கழுதையின் கத்தலுக்கே அது கிடைக்கும், இவள் என்ன பேசுகிறாள்? "ஆனால் கட்டில் சுாத்திருக்கலாம்.' காத்திருப்பதா? எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்." என் கன்னங்களில் வெட்க ரத்தம் குறுகுறுத்தது. 'ஓ' கங்கிராட்ஸ். காத்திருக்கலாமென்றால் காப்பி குடிக்கும் நேரம் வரையில்.’’ நம் இருவரின் சிரிப்பு ஒன்றோடொன்று கலந்தது. 'நீங்கள் பெல்லை அழுத்துகையில் நான் காப்பி தயார் பண்ணிக்கொண்டிருந்தேன். உள்ளே வாருங்கள்' சொல்லிக்கொண்டே நீ மே லா க் கை சரிப்படுத்திக் கொண்டாய். தற்செயலா அல்லது அதில் நான் சைகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/323&oldid=741683" இருந்து மீள்விக்கப்பட்டது