பக்கம்:அவள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxxiii



 

டார்ச்சு லைட்டை வாயில் வைத்துக்கொண்டு) நான் ஜனனி பேசறேன். என்னா பண்ணறே? சாப்பிடறியா? சமத்தா, படுத்தாமே சாப்பிடு. இங்கே சின்னியக்கா இருக்கா, சீகாந்த் இருக்கான். யஹாமா இருக்கு. நோக்கு அக்கா எப்போ பொறப்பா? சரி நா வெச்சுடறேன். நீயும் வெச்சுடு, வெச்சுட்டியா?"

தன் முக்யம்பற்றி வந்திருக்கும் ப்ரக்ஹையை எப்படி அனுபவிக்கிறாள்!

***

தஞ்சாவூரிலிருந்து வரத் தாமதமாகிவிட்டது. காலை மணி 11.30க்குதான், எங்கள் முன்னிலையில் அபிஷேகம் ஆரம்பிக்கிறது.

அபிஷேகத்தில், அதன்மேல் தோற்றமான உபசாரம் மட்டுமல்ல. வேறு தாத்பர்யங்களும் அடங்கிய செளந்தர்ய உபாஸனையைச் சேர்ந்ததென்றே நினைக்கிறேன். சிற்பி சிலையை சிருஷ்டிப்பது போன்று, கலைஞன் ஒவியம் தீட்டுவது போன்று. அடுத்தபடியாக அபிஷேகம் செய்பவரின் ஆசாரம், காட்டும் சிரத்தை மூலம், அல்ல அபிஷேகத்தின்மூலம், அபிஷேகிக்கப்படும் உருவத்தின் அழகுகளின் தன்மைகள், பல கோணங்களில் வெளிப்படுகின்றன. அவைகளின் அந்த மூர்த்தத்தின் பாவனைகளையும் படிக்க முடிந்தவர்கள், நுண்ணுணர்வு படைத்தவர், கற்பனையில் தரிசனம் காண்பவர்கள். I Consider image-nation as an extension of the present. It is an aspect of truth

முதலில் எண்ணெய்க் காப்பில் அவள் அங்கங்கள் பளபளக்கின்றன. அங்கங்கள் 'விண் விண்' தெறிக்கின்றன. என் தகப்பனார் என்னிடம் வளர்த்திருந்த பாலனைப்படி வயோதிக ரூபத்தில் இருப்பாள் என்று நினைத்தது தவறு. நன்றாக இருக்கிறாள். அவள் ஆள் உயரத்துக்கேற்றபடி உண்மையை ஒட்டியே இருக்கிறாள்.

—C

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/33&oldid=1496111" இலிருந்து மீள்விக்கப்பட்டது