பக்கம்:அவள்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்புள்ள ஸ்நேகிதிக்கு 287 ஒன்றிரண்டு பிரசவங்களுக்கு நான் பக்கத்தில் கூ இல்லை. கேம்ப். - விசுவாமித்திரர் மேனகை ரவிவிர்மா படமொன்று பார்த்திருக்கிறாயா? ரிஷி ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டு மறு கையால் ஒதுக்குகிறார். மேனகை எதிரே குழந்தையை நீட்டியவண்ணம் கேலி சிரிக்கிறாள். வேலைப்பாட்டில் என் கதி அப்படியிருந்தால் ஸ-னோவுக் குத்தான் எப்படி இருக்கும்? யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஏற்கனவே எங்களுக்குள் இனம் இல்லை. எந்த மண வாழ்க்கையிலும் இதுதான் படிப்படியாகத் தெளியும் யதார்த்தம். இனம் இல்லை. குழந்தைகளும் பெரிதாகிவிட்டன. எல்லோரும் அம்மா ஜாடை அம்மா கட்சி. தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டாள். ஸுனோவுக்குத் தெரியும். சப்பாத்தியில் எந்தப் பக்கம் நெய் தடவி இருக்கிறது என்று. பெண்கள் எப்பவுழே ஆண்களைவிட நாள் ஏறஏற யதார்த்திகள். நான் நாயும் சீந்தாத காய்ந்த ரொட்டித் துண்டு. ஆனால் யார் மேலும் தப்பில்லை. பிறகு அன்று ஆஸ்பத்திரியில் உன்னைப் பார்த்ததுதான். அடுத்த முறை. ஆனால் இப்பொழுது குங்கிலியம் குபிரிட்டுவிட்டது. எரிகிறேன். நெஞ்சு மணக்கிறது. உடலெல்லாம் உள்ளே பரிமளம் புகைகிறது. அமலி எங்கிருந்து எனக்குள் திடீரென்று இத்தனை ஈரம்? எண்ணெய் உண்மையில் நான் காயவில்லையா? ஆனால் ஒன்று. உடலுறவினால் நமக்கினிப் பயனில்லை. ரிஷிபஞ்சமி முழிக்காவிட்டாலும் நீ தாண்டியிருப்பாய். அன்று இழந்த சந்தர்ப்பத்தை இன்று மீட்க முடியும் என்று நம்பிக்கை என்னுள்ளே திரி வைத்துவிட்டது. இந்த நம்பிக்கையில் கட்டில் கிடையாது பாயும் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/331&oldid=741692" இருந்து மீள்விக்கப்பட்டது