பக்கம்:அவள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துளசி 293

படர்ந்துட்டையே. சீக்கிரமே பெரும்புதர் ஆகிவிடுவாய் போலிருக்கிறதே. ஆனால் நீ துளசியாய் வாழறது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.

பாட்டி, போகப்போக என்னுடைய குழந்தை நாட்களுக்கு—பிஞ்சு நாட்களுக்கே போக ஆசையாய் இருக்கு. அங்கு விட்டுட்டு வர மனசே இல்லை. என்னைச் சுத்தி எல்லாரும் மாறிண்டே இருக்கா. அப்பா சிடுசிடுக்கறா, அம்மா கடுகடுக்கறா. அண்ணன் வேலைக்குப் போறான். அநேகமா எல்லாருக்குமே எனக்காக நேரமில்லை. அவனவன் ஜோலி, அவனவன் நேரம், அவனவன் எண்ணம் என்று அவனவனுக்கு நேரம் போதவில்லை. யாருமே பழசு மாதிரி ஒருவருக்கொருவர் தன்னைப் பங்கிட்டுக்கொள்வதில்லை.

ப்பா "என்னடா கதைன்னும் கவிதைன்னும் கிறுக்கிண்டு வீண் பொழுது போக்கற? வயித்துப் பொழைப்பை கவனிடா. நீ சரபோஜின்னு உனக்குள் எண்ணமோ!"

பாட்டி உன் பேரக்குழந்தைகள் யாரையுமே நீ துரக்கின தில்லையாமே. ஆனா ஒருசமயம் நீ என்னைத் தூக்க நேர்ந்துபோச்சு. அது எனக்கே ஞாபகமிருக்கு. ரொம்ப சின்னதிலேருந்தே ரொம்ப சின்ன சின்னதெல்லாம் ஞாபகமிருக்கு. என்னவோ கடிச்சுடுத்து. 'பாட்டி வலிக்குது வலிக்குதுன்னு' முனகினேன். (எப்பவுமே வாய்விட்டு அழுததில்லை. என் தலைவிதி) நீ என்னைத் தூக்கிண்டு 'ஒண்ணுமில்லேடா ஒண்ணுமில்லேடா எறும்புதான்னு' குலுக்கிண்டு கூடத்துல குறுக்கும் நெடுக்குமாக நடந்தே. 'எறும்புன்னா ஏன் இவ்வளவு அவஸ்த்தைப் படறேன்னு' அப்பா கேட்டா. "உஷ்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/337&oldid=1497802" இலிருந்து மீள்விக்கப்பட்டது