பக்கம்:அவள்.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


துளசி 295 அடச்சே! இதெல்லாம் ஒண்ணுமில்லே. இதுக்கப் புறம் ஒண்னு நடந்ததே அதுதான் பாட்டி மறக்கவே {ւքւգաո #i அன்னிக்கு தாத்தா தெவசம். சிறுசுகளை எல்லாம் சமையலுள்ளேயே விடமாட்டா. ஆனா நான் எப்படியோ உள்ளே நுழைஞ்சு ஒரு அதிரசத்தை எடுத்துக் கடிச்சுட் டேன். அம்மா பார்த்துட்டா. ஒரேடியா பதறி வாயில் வந்தபடி என்னைத் திட்டிண்டே, அடிச்சுட்டா.- நான் அடி வாங்க என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலை. பார்த்தேன். எடுத் தேன். கடிச்சுட்டேன். 'என்னடி சிவகாமி?'-பின்னாடிலேருந்து பாட்டி குரல் அமைதியாய் வந்தது. கடங்காரன் பாவத்தைத் தேடித் தந்துட்டாம்மா. அதிரசத்தைத் திருடிட்டான்' என்னை நேராகப் பார்த்தாய். எனக்கு பயமாயிருந்தது, எடுத்தையா?” - வாயைக் குதப்பிண்டே தலையை ஆட்டினேன். "என்னம்மா பண்றது. எல்லாம் மறுபடியும் முதல் லேருந்தே ஆரம்பிச்சாகனுமே!’’ அம்மா குரல் நடுங்கித்து. அம்மா திகிலாயிட்டா. என்மேல் வைத்த பார்வை விலகவில்லை. மாற வில்லை. பாட்டி! உனக்கு ஒரு மாதிரி ரவுண்டு முழி. லேசாய் கொய்யாக் காய்க்கு சிவப்பும் மஞ்சளுமா பூக்கிற மாதிரி முகம் மாறிற்று. - அந்த நேரத்தை கோலி மாதிரி கையினாலேயே தடவ முடியும். - - 'ம்...மேல் காரியம் நடக்கட்டும்' என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய்விட்டாய். இப் போ து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/339&oldid=741700" இருந்து மீள்விக்கப்பட்டது