பக்கம்:அவள்.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வீம்புக்கு மருதாணி இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்திக் கதை, "அப்போது குடியிருந்த வீட்டில் எங்களைச் சேர்த்து இரண்டு குடித்தனங்கள். நாங்கள் வந்து ஒரு மாதத்துக்குப் பின் அந்தக் குடித்தனம் ஏறியது. முற்றத்தில் மருதாணி மரம். ஸார், என்னிலும் பத்து வயதேனும் இளையவர். புது நாட்டுப் பெண். மாமியார், நாத்தனார், நாத்தனாருக்கு ஒரு பெண், சின்னஞ் சிறுசு. - நாத்தனாரும் மன்னியும் வெகு ஒற்றுமை. மாமியார் பசு. ஸார், தங்கைமேல் உயிர். உத்தியோக ரீதியில் காலையில் போனால், விளக்கு வைக்கும் நேரத்துக்குத்தான் திரும்புவார். அதிகமாகப் பேச மாட்டார். முசிடு இல்லை. குரலும் தூக்காது. பேச்சு, குரல், தோரணை எல்லாமே அமைதி. அழுத்தத்தில் so soupé. Strong, Silent Maie. stoulou?65áà asswäg ஆசை. ஆனால் அம்சம் இல்லையே! துளசி, ஏதோ பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். குடும்பத்துக்கு அவளால் இயன்றது குருவிக்கணக்கில் இருக்கலாம். ஆனால் குடும்பம் என்றால் எல்லாமும்தான் தேவையாயிருக்கிறதே! சுயகெளரவம் வேறே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/346&oldid=741708" இருந்து மீள்விக்கப்பட்டது