பக்கம்:அவள்.pdf/347

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வீம்புக்கு மருதாணி 0ே3 துளசி நல்ல நிறம். ஆனால் அழகு என்று சொல்வதற் கில்லை. அடர்ந்த ஆண் புருவம். சிறு கூடு. துருதுரு வென்றிருந்தாள். அவள் வளைய வருவதைக் காண்கையில் எனக்குச் சூரியனின் கதிர் நினைப்பு வந்தது. காலைக் கதிரின் உற்சாகத்தோடு கலந்த மாலைச் சோகம். துளசியின் நெற்றி வெறிச்சாயிருந்தது. ஆனால், கழுத்தில் சரடு தெரிந்தது. சரடு மட்டும்தான்? யார் வழிக்கும் யாரும் போகக்கூடாது; என் கொள்கை பார், கவனி, புழுங்கு, ஆனால் கேளாதே. துளசி என்னோடு பேசுவதில்லை. oேod, ஆண், பெண் இடையே அந்த ஒதுக்கம் தான் முறை எனும் கருத்தினன் நான். அந்தப் பரஸ்பர அத்துவில் ஒரு கலையழகு கண்டேன். பொதுவாக அந்தக் குடும்பம், பழகவும் கவனிக்கவும் சந்தோஷத்தை விளைவித்தது. ஆனால்-இதுதானே. புல்லில் பாம்பு எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏரி அமைதி. காற்றில் அலண்டாற்போல்; அங்கே சலனம் உணர்ந்தேன். அது உடனே வெளிக் காட்டவில்லை. அதன் சுழல் வெகு ஆழத் திணின்று உள்ளேயே திரள் கட்டிக்கொண்டு, வெளித் தெரியவில்லை. கி.சு.கிசு...கிசு...கிசு...குமையல்... - லார் முகத்தில் கல் இறுக்கம் கண்டது. அதைக் கண்டு மாமியாருக்கும், நாட்டுப் பெண்ணுக்கும் பேஸ்து" அடித்தது. துளசிக்கு முகத்தில் காலைக் கதிரொளி கூடியது. லேசாகப் பாட்டு முனகல்கூட. - கூடிய சீக்கிரம் இரு குடும்பங்களின் மூதாட்டி களிடையே விஷயம் உடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/347&oldid=741709" இருந்து மீள்விக்கப்பட்டது