பக்கம்:அவள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீம்புக்கு மருதாணி 307

 Slum area மீன் கடை இரைச்சல். நாற்றம்கூட. பல தரப்பட்டோர் குடித்தனங்களிடையே வளை போன்று அவள் இடம். வளை போன்று இருட்டு.

'மாமா வாங்கோ வாங்கோ, சத்தே குனிஞ்சு..." ஆனால் நான் தலையில் இடிச்சுண்டாச்சு. "ஐயோ ஸாரி, உட்காருங்கோ, என்ன சாப்பிடறேள்? காபி, ஹார்விக்ஸ் B.V.'"

அவள் பின்னாவிலிருந்து மாமி வேண்டாம் என்று அவசரமாக சாடை காட்டினாள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மெளனமாக நின்றோம். எந்நேரமோ?

சடக்கென்று அவள் முகம், அவள் கைக்குள் புதைந்தது. விக்கி விக்கி மாரே வெடித்துவிடும்போல்...

தலை நிமிர்ந்தபோது அவள் முகம் கொழுந்து விட்டெரிந்தது.

'எனக்கு அவசரமா ஐம்பது ரூபா வேணும்.' நல்ல வேளையாக பர்ஸில் அவள் கேட்டது இருந்தது. ஏதோ அவசரச் செலவுக்கு அன்றுதான் புரட்டினேன். ஆனால் யார் தேவை முன்?

வெகு நாட்களுக்குப் பின்.

பிற்பகல் மூன்று மணி இருக்கும். சேத்துப்பட்டு மேம்பாலம் வழி போய்க்கொண்டிருந்தேன்.

ஸ்டேஷனுக்கு இறங்கும் இடத்தில், மூன்று ரெளடிகள் ஒருத்தியைச் சூழ்ந்துகொண்டு கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் சூரப்புலி இல்லை. என்னைக் கண்டதும் நழுவிவிட்டார்கள். ஒருகணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/351&oldid=1497875" இலிருந்து மீள்விக்கப்பட்டது