பக்கம்:அவள்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


303 லா. ச. ராமாமிருதம் எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் அவள் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் விர்'ரென்று படிக்கட்டு வழி யிறங்கி மறைந்து போனாள். 岑 மீண்டும் வெகுவெகு நீள இடைக்காலத்துக்குப் பின், மாலை வேளை மவுண்ட்ரோடு. ஆபீஸ் விட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். முதல் தேதி சம்பளம். குழந்தைகளுக்கு 100 கிராம் சாக்லேட் என் பங்கு போகும் வழிக்கு-அதோ யார், எனக்கு நாவடி முன்னால்? "துளசி!' வெடுக்கெனத் திரும்பினாள். என்னைப் பார்த்ததும் முகத்தில் சூரியன் புறப்பட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. பேசாமல் கையை நீட்டினேன். ஐந்தாறு சாக்லேட்டுகள். ஒன்று எடுத்துக்கொண்டாள். 'எல்லாம் உனக்குத்தான், கமலிக்கு வேண்டாமா : இன்னொன்று எடுத்துக்கொண்டாள். நான் வரேன் மாமா' சரசரவென ஜே ஜே வில் மறைந்துவிட்டான். ஏன், இந்த அவசரம்? என்னிடமிருந்து ஒ. ஏன் இவ்வளவு கவலை? வருடங்கள். நாங்கள் வீடு மாறி வேறு ரோந்துக்கே போய் விட்டோம். காலை ஆபீஸ் நேரம். அந்த பஸ் ஸ்டாப்"பில் நான் ஏறுவதில்லை. அதுவே என் குட் இல்லை. வேறு ஜோலியாக அந்தப் பக்கம் வந்து இசைகேடாக மாட்டிக்கொண்டு விட்டேன். "மாமா, செளக்யமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/352&oldid=741715" இருந்து மீள்விக்கப்பட்டது