பக்கம்:அவள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 315

"அவளே ஒரு ராகம், அவள் தனியாய்கூடப் பாடணுமா?"

"என்னடா வெட்கமில்லாமல் பிதற்றுகிறாய்? எல்லாம் கிடக்கட்டும் என்றாலும்—என்னதான் இந்தக் காலத்துப் பெண் என்றாலும்—பத்துப்பேர் நடுவில் கூடத்தில் லஜ்ஜையேயில்லாமல் பஜ்ஜிக்கு உப்புப் போதுமா என்று கேட்டுதே! ஏதேது இப்பவே இப்படியிருந்தால் போகப்போக ஊரையே விற்றுவிடுவாள் போலிருக்கே...!"

"அவள் பேசவில்லை அம்மா—ராகம் பேசுகிறது. அபூர்வராகம். அரங்கேற்றுபடி கஷ்டம்தான். இதோ பார், நான் கலியாணம் பண்ணிக்க வேண்டுமென்றிருந்தால், அதுவும் உனக்காகத்தான் பண்ணிக்கனும், அவளைத்தான் பண்ணிக்கொள்வேன். இல்லாவிட்டால்..."

ஆகையால் எங்களிருவருக்கும் மணம் நடந்தது.

இனிமேல்தான் சிரமம்.

நாங்கள் இன்னமாதிரி இருந்தோம் என்று சித்தரிக்க மேற்கொண்ட இம்முயற்சி, கேவலம் ஒரு புருஷன் பெண்ஜாதியின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கும் விரஸமாய் முடியுமா, அல்ல எங்கள் இளமையின் புதுமையில் வாழ்க்கையையே ஒரு மஹா சங்கீதமாயும் அதில் அவளை ஒரு அபூர்வ ராகமாயும் பாவித்து, அதன் சஞ்சாரத்தை உருவாக்கும் வசன கவிதையாக அமையுமோ அறியேன்.

வாஸ்தவத்தில் இவ்வரலாற்றில் என் பாத்திரம் எவ்வளவு முக்கியமானதென்று எனக்கு இன்னமும் நிச்சயமாகவில்லை. நான் இப்பொழுதிருக்கிற மாதிரி அப்போதில்லை. முன்னைவிட எனக்கு இப்போது 'நாகரீகம்' முற்றிவிட்டது! என் உடலில் ஒடிய என் அப்பனின் மிருக ரத்தம் சுண்டிவிட்டது. நானும் என் தாயின் இஷ்டப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/359&oldid=1497927" இலிருந்து மீள்விக்கப்பட்டது