பக்கம்:அவள்.pdf/361

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அபூர்வ ராகம் 7 மூடுசூளையாய்ப் பேசுவதிலேயே எனக்கு ஒரு ஆசை, நான் இதுவரை அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றையொன்று புரிந்து கொள்வது போல், நாங்கள் அர்த்தமற்ற, அல்ல அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரையொருவர் அர்த்தம் கண்டுகொள்வதில் ஒரு இன்பம. 'நான் ஒரு பாவி-’ என்றேன். மறுபடிம் விழித்தாள். "இது ஒரு புண்ணிய நாடு, கரைக்காலம்மையார், மங்கையர்க்கரசி, சக்குபாய், மீராபாய், அகமுடையான் களைக் கரையேற்றிய புண்ணியவதிகள் பிறந்த நாடு’ என்றேன். "என்னை மறந்துவிட்டீர்களே! என்றாள். "ஆம், நான் ஒரு பாவி. நல்ல வழிகாட்ட ஒரு நல்ல மனைவியிருந்தும், கரையேற இயலாது தவிக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம் எனக்குத் தெரிய வில்லை. பசி கண்ணை மறைக்கிறது. என்னை ஆட்கொள்ளல் வேண்டும்.” . 'பக்தரே உம் பசியை மெச்சினேன். நான் தொழும் கடவுளை உமக்குக் காண்பிக்க யாதொரு ஆட்சேபணையு மில்லை.” "எங்கே? எங்கே? என் பூனைக் கண்ணுக்குத் தெரிய வில்லையே! என்று இரு கைகளையும் நீட்டிக்கொண்டு, மிரள மிரள விழித்துப் பிரலாபித்தேன். அவர் தூணிலு மிருப்பாரா? துரும்பில்தான் இருப்பாரா?” 'இல்லை, வெண்கலப் பானையிலிருக்கிறார்' என்று சிப்பல் தட்டை நீக்கி உள்ளிருக்கும் சக்கரைப் பொங்கலைக் காண்பிததாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/361&oldid=741725" இருந்து மீள்விக்கப்பட்டது