பக்கம்:அவள்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


320 லா. ச. ராமாமிருதம் 'இந்த யோசனை கொஞ்சம் தாமதமாய் வருகிறது . சஏனோ?” 'என்னைக் கட்டிக்கொண்ட பொழுதே தோன்றி யிருக்க வேண்டாமா? 'உன் கறுப்பின் இருள் என் மனதில் புகுந்து, அந்தக் சாயத்தில் என்னைக் குருடாக்கிவிட்டதே! ஆ ை ல் எனக்கு வெளிச்சம் வேண்டாம். இவ்விருள் என் மனதில் எப்போதுமே நிறைந்து இருக்கட்டும்.' நான் அவள் பக்கமாய்ச் சாய்கையில், அவள் வைர மூக்குத்தி ஜ்வலித்தது. தாழம்பூவின் மணம் மனத்தை மயக்கியது. மூடிய கண்ணைத் திறவாது, அவள் என் கையை நாடி, விரலோடு விரல் பின்னி இழுத்து மார் பின் மேல் வைத்துக்கொண்டாள். 'பாருங்கள், நான் கறுப்பாயிருந்தாலென்ன? என் இதயம் உங்களுடையது மாதிரியேதான் துடிக்கிறது. வேனுமானால்...' - 'நன்றாகத்தான் துடிக்கிறது. கறுப்பாயிருப்பவர் களின் ரத்தத்திற்கே படபடப்பு அதிகம் என்று சொல் வார்கள். நான் கறுப்பாயில்லையே என்றுதான் எனக்கு இருக்கிறது." "இரண்டுபேரும் ராகமாய்விட்டால் அ ப் புற ம் ராகத்தை வாசிக்க யாராவது வேண்டாமா? அதனால் தான் என் கவி சிவப்பாயிருக்க வேண்டும். நான் ராகம்கறுப்பாகத்தானிருப்பேன். என்னைக் கட்டி வாசிக்கும் என் கவி சிவப்பாகத்தானிருக்க வேண்டும். கவிக்கு ராகம் வேண்டுமெனில் ராகத்திற்கும்தான் கவி வேணும்-' "நாம் இருவரும் கொஞ்ச நாள் பிரிந்திருந்து பார்ப்போமே!" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/364&oldid=741728" இருந்து மீள்விக்கப்பட்டது